/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவு; உடனடியாக வேண்டும் தீர்வு
/
நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவு; உடனடியாக வேண்டும் தீர்வு
நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவு; உடனடியாக வேண்டும் தீர்வு
நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவு; உடனடியாக வேண்டும் தீர்வு
ADDED : ஆக 25, 2025 10:11 PM

நொய்யலில் கோழிக்கழிவு சிங்காநல்லுார் நொய்யல் ஆற்றில், தினமும் இரவு வாகனங்களில் வந்து கோழிக்கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். தண்ணீர் மாசடைவதுடன், கரையோரம் ஒதுங்கும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- வன்னியகுமார்,
சிங்காநல்லுார்.
பகலிலும் எரியும் தெருவிளக்கு வெள்ளக்கிணறு பிரிவு, திருவள்ளுவர் வீதியில், ஒரு மாதமாக 24 மணி நேரமும் தெருவிளக்கு எரிகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தெருவிளக்கை காலை, மாலையில் சரியாக 'ஆன், ஆப்' செய்ய வேண்டும்.
- தினகரன், திருவள்ளுவர் வீதி.
வீதியெல்லாம் நாறுது வேலாண்டிபாளையம், சாஸ்திரி ரோடு, 44வது வார்டு, ஜானகி நகர் பகுதியில், குப்பையால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதுடன், குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஜோசப்,
வேலாண்டிபாளையம்.
சீரமைக்காததால் சிரமம் அத்திப்பாளையம் பிரிவு வழியாக, சின்ன வேடம்பட்டி முதல் சங்கரா கல்லுாரி செல்லும் சாலையில், பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின், தார் ஊற்றி சாலையை சரியாக சீரமைக்கவில்லை. மழைக்காலத்தில் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன.
- மணிமாறன், சின்ன வேடம்பட்டி.
தோண்டினார்கள்... மூடவில்லை புலியகுளம், தாமு நகர், அலமேலு மங்கம்மாள் லே-அவுட் நுழைவாயிலில், தண்ணீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை சரியாக மூடவில்லை. குழியால் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நடக்கின்றன.
- சுப்பு, புலியகுளம்.
அரைகுறை பணியால் அவதி வீரகேரளம், 19வது வார்டில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. அனைத்து வீடுகளிலும் சேம்பர் கட்டி, வெறும் மூடி மட்டும் போட்டுச் சென்றுள்ளனர். சுற்றிலும் சிமென்ட் கலவை போடாமல், குழியாக உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளது.
- பாலசுந்தரம், வீரகேரளம்.
சாலையை மறைக்கும் புதர் கணபதிபுதுார், 29வது வார்டு, நான்காம் வீதியில் போர்வெல் பம்ப் உள்ள இடத்தில் செடி, மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலையோரம் நடந்து செல்பவர்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் சிரமமாக உள்ளது.
- இனியன், கணபதிபுதுார்.
வேகத்தடை வேண்டும் ரெட்பீல்ட்ஸ், நிர்மலா பள்ளி அருகே அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். விபத்துகளை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ராஜா, ரெட்பீல்ட்ஸ்.
குறுகிப்போன சாலை தடாகம் ரோடு, இடையர்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியில், தபால் அலுவலகம் செல்லும் சாலையில், 10 அடி ரோட்டின் ஓரத்தில் இன்டர்நெட் கம்பம் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகியதாக இருக்கும் அச்சாலையில், புதிதாக நட்ட கம்பத்தால் மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து ரேம்ப்களும் அமைத்துள்ளனர்.
- ராஜ்குமார், இடையர்பாளையம்.
தெருவிளக்கு பழுது வேலாண்டிபாளையம், ராமசாமி வீதியில், பட்டீஸ்வரர் ஹெரிடேஜ் அபார்ட்மென்ட் அருகே, கம்பம் எண் 14ல் தெருவிளக்கு எரியவில்லை.
- மகேஷ்குமார், வேலாண்டிபாளையம்.
விழும் நிலையில் மரம் சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு, என்.எஸ்.ஆர்., பேக்கரி அருகே பழைய மரத்தின் அடிப்பகுதியில் பெரிய பிளவு உள்ளது. அடிப்பகுதி மிகவும் வலுவிழந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
- லெனின், சாய்பாபா காலனி.