/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாலத்தில் உருக்குலைந்த ஓடுதளம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
/
ரயில்வே பாலத்தில் உருக்குலைந்த ஓடுதளம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
ரயில்வே பாலத்தில் உருக்குலைந்த ஓடுதளம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
ரயில்வே பாலத்தில் உருக்குலைந்த ஓடுதளம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
ADDED : ஜூன் 15, 2025 10:02 PM

ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி, புளியம்பட்டி தனியார் கல்லூரி அருகே ரோட்டோரம் அதிக அளவு குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு கடும் சிரமமும் ஏற்படுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை குவிப்பதையும், தீ வைத்து எரிப்பதையும் ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
- நந்தினி, பொள்ளாச்சி.
வேகத்தடை உயரமில்லை
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மார்க்கெட் அருகே உள்ள தொடர் வேகத்தடை மிகவும் சிறியதாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் பலர் அங்கு வேகத்தை குறைப்பதில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மீண்டும் இங்கு வேகத்தடையை சற்று உயரமாக அமைக்க வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
வீணாகும் குடிநீர்
கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூரில் சர்வீஸ் ரோட்டில் உள்ள குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு ஒரு வாரமாக ரோட்டில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நீர்க்கசிவை விரைவில் சரி செய்ய வேண்டும்.
- மனோஜ், கிணத்துக்கடவு.
குடியிருப்பு அருகே குப்பை
கிணத்துக்கடவு, அண்ணா நகர் கம்பன் வீதி செல்லும் வழியில், குடியிருப்பு அருகே அதிகளவு குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இப்பகுதியில் குப்பைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிகண்டன், கிணத்துக்கடவு.
உருக்குலைந்த ஓடுதளம்
பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழித்தடத்தில், சீனிவாசபுரம் பகுதியில் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே சுரங்கபாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஓடுதளம் முழுவதும் உருக்குலைந்து உள்ளது. அதனால், கான்கிரீட் ஓடு தளத்தை அகற்றி விட்டு, தார் ரோடு அமைக்க வேண்டும்.
- தங்கமணி, பொள்ளாச்சி.
ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம்., முதல் தெரு, ரத்தினம் நகர் சந்திப்பு அருகே, ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக பைக்கில் செல்பவர்கள் பெரும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் கீழே விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- மாணிக்கம், பொள்ளாச்சி.
ஓவர் லோடு
உடுமலை - கொழுமம் ரோட்டில், வாகனத்தில் அளவுக்கு அதிகமாக, விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஜல்லி கற்களை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் வாகனத்திற்கு பின்னால் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமன், உடுமலை.
சாயும் மரக்கிளைகள்
உடுமலை, பழநிரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மரக்கிளைகள், சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று பலமாக வீசும் நேரங்களில் மரக்கிளைகள் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் வந்து செல்வதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் ஆபத்தான சூழலும் உள்ளது.
- ராதா, உடுமலை.
இருளை போக்குங்க
உடுமலை, பழனியாண்டவர் நகர் நான்காவது வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கும் வீதியில் இருள் சூழ்ந்திருப்பதால் அச்சப்படுகின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்களில் வருவோரை தெருநாய்களும் துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன.
- ஜெயராம், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, சாய்ராம் லே-அவுட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்புகளின் முன் கூட்டமாக உலா வருவதால், வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் உள்ள பைகளை கடிப்பது என தொடர்ந்து தொல்லை தருகின்றன.
- விசாலாட்சி, உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் மேயவிடும் கால்நடைகளும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உட்கொள்கின்றன. குப்பைக்கழிவுகளை சுத்தம் செய்வதற்கு கல்லுாரி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிகண்டன், உடுமலை.
தாழ்வாக செல்லும் கேபிள்
உடுமலை அன்சாரி வீதியில், கேபிள் ஒயர்கள் தொங்கியபடி தாழ்வாக செல்கிறது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வாக செல்லும் கேபிள் ஒயர்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தரம், உடுமலை.