/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்; நிரந்தர தீர்வு தேவை!
/
மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்; நிரந்தர தீர்வு தேவை!
மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்; நிரந்தர தீர்வு தேவை!
மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்; நிரந்தர தீர்வு தேவை!
ADDED : அக் 05, 2025 11:53 PM

மேம்பாலத்தில் சேதம்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு மேம்பாலத்தின் ஓடுதளத்தில் இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இரும்பு சட்டங்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்லும் போது தடதடவென அடிக்கின்றன. அடிக்கடி இப்பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
-- நவநீதன், பொள்ளாச்சி.
போக்குவரத்துக்கு இடையூறு வால்பாறை நகரில், பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரோட்டோரம் ஆங்காங்கே வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விதிமீறி ரோட்டோரம் நிற்கும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நவீன், வால்பாறை.
இரவில் வெளிச்சம் இல்லை பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், பஸ் ஸ்டாண்டிலிருந்து மேம்பாலம் வரை மின்விளக்குகள் சரிவர எரியாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் நடந்து செல்பவர்கள் போதிய வெளிச்சம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
- மகேஸ்வரன், பொள்ளாச்சி.
வேகத்தடையால் தொல்லை பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதி ரயில்வே கேட் அருகே, பிளாஸ்டிக்கில் தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டுனர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, இந்த வேகத்தடையை அகற்றி, வாகனம் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
தடுப்பு வைக்கணும்! கோதவாடியில் இருந்து கிணத்துக்கடவு மயானம் ரோட்டின் வளைவுப் பகுதி வழியாக நீரோடை குறுக்கிடுகிறது. இங்கு தடுப்பு இல்லாததால் வாகனம் ஓட்டுநர்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே வளைவுப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும்.
-- கேசவன், கிணத்துக்கடவு.
வாகனங்களால் இடையூறு உடுமலை அனுஷநகர் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவனேசன், உடுமலை.
குப்பையை அகற்றணும் உடுமலை பழநிரோட்டில், ஓரங்களில் ஆங்காங்கே குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, குப்பையை வீசிச்செல்வதை தடுக்கவும், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு, உடுமலை.
பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் உடுமலை பஸ் ஸ்டாண்டில், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திகேயன், உடுமலை.
நடைபாதை சேதம் உடுமலை கொழுமம் ரோடு பிரிவு முதல், தனியார் கல்லுாரி வரை மாணவர்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு இல்லாததால், நடைபாதை சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளிமுத்து, உடுமலை.
துார்வார வேண்டும் உடுமலை பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளம் நீர்நிலையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அங்கு துார்வாரப்படாததால், குப்பை, செடிகள் தேங்கி, சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
ரவுண்டானா வேண்டும் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால் ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. இதனால், அடிக்கடி இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பையா, உடுமலை.
நடைபாதையில் புதர் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் முன், சர்வீஸ் ரோட்டோரம் உள்ள நடைபாதையில் அதிகளவு செடி, கொடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத படி இருக்கிறது. இதை பேரூராட்சி நிர்வாகமோ அல்லது தேசிய நெடுஞ்சாலை துறையோ உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
--- பிரசாந்த், கிணத்துக்கடவு.