/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த மின்கம்பம்; மாற்றியமைக்காததால் மக்கள் அச்சம்
/
சேதமடைந்த மின்கம்பம்; மாற்றியமைக்காததால் மக்கள் அச்சம்
சேதமடைந்த மின்கம்பம்; மாற்றியமைக்காததால் மக்கள் அச்சம்
சேதமடைந்த மின்கம்பம்; மாற்றியமைக்காததால் மக்கள் அச்சம்
ADDED : செப் 28, 2025 11:47 PM

சேதமடைந்த மின்கம்பம் நல்லட்டிபாளையம், வீரமாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பம் கான்கிரீட் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால் மின்வாரியத்தினர் உடனடியாக புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும்.
-- நஞ்சுண்டசாமி, நல்லட்டிபாளையம்.
ஒளிராத தெருவிளக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து, காந்தி சிலை வரை ரோட்டோரம் உள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இத்துடன் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்ய வேண்டும்.
- ரமேஷ், பொள்ளாச்சி.
குறுக்குப்பட்டை சேதம் பொள்ளாச்சி - கோவை ரோடு வடக்கிபாளையம் பிரிவில் ரோட்டின் குறுக்குப்பட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்லும்போது தடுமாறுகின்றனர். எனவே வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த குறுக்குபட்டயை முழுவதுமாக அகற்றம் செய்ய வேண்டும்.
- செந்தில், பொள்ளாச்சி.
ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி சி.டி.சி., மேட்டில் இருந்து, வடுகபாளையம் செல்லும் வழியில் ரோட்டோரம் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதை நகராட்சி அதிகாரிகள் கவனித்து குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- அருண், பொள்ளாச்சி.
துார்வார வேண்டும் உடுமலை -- பழநி ரோட்டில் கழுத்தருத்தான்பள்ளம் மழைநீர் வடிகாலில் செடிகள், குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், உடுமலை.
ரோடு சீரமைக்கணும் உடுமலை, வக்கீல் நாகராஜன் வீதி நால்ரோட்டில் பாதாள சாக்கடை குழிகளில் பழுதுபார்க்கும் பணிகளுக்கு ரோடு தோண்டப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற பின், மீண்டும் ரோடு சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்குள்ளாகின்றனர்.
- மணிகண்டன், உடுமலை.
பராமரிப்பு இல்லை உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், குப்பை நிறைந்துள்ளது. பயணியர் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சியினர் நிழற்கூரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
கால்வாயில் குப்பை உடுமலை ராஜலட்சுமிநகர் செல்லும் ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் குப்பை, கழிவுகள் காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, உடுமலை.
அடையாளம் இல்லை உடுமலை ஏரிப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாததால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இதற்கு வெள்ளை கோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபு, உடுமலை.
நிழற்கூரை வேண்டும் குடிமங்கலம் நால்ரோட்டில், தாராபுரம் வழித்தட பஸ்கள் நிற்குமிடத்தில் நிழற்கூரை இல்லாததால், மக்கள் வெயிலில் நின்று சிரமப்பட்டு வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
ரோட்டில் தண்ணீர் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, சர்வீஸ் ரோட்டில் இருந்து பள்ளிவாசல் வீதி செல்லும் மண் ரோட்டின் ஓரத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வழிந்தோடுகிறது. பல நாட்களாக சரி செய்யப்படாமல் இருப்பதால் ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்த சிரமம் ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
--- கணபதி, கிணத்துக்கடவு.