/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
நகரின் பல பகுதிகளில் மிரட்டுகிறது இருட்டு; தெருவிளக்குகளில் தரமற்ற 'பல்புகள்' அவுட்டு
/
நகரின் பல பகுதிகளில் மிரட்டுகிறது இருட்டு; தெருவிளக்குகளில் தரமற்ற 'பல்புகள்' அவுட்டு
நகரின் பல பகுதிகளில் மிரட்டுகிறது இருட்டு; தெருவிளக்குகளில் தரமற்ற 'பல்புகள்' அவுட்டு
நகரின் பல பகுதிகளில் மிரட்டுகிறது இருட்டு; தெருவிளக்குகளில் தரமற்ற 'பல்புகள்' அவுட்டு
ADDED : ஜூலை 21, 2025 10:59 PM

பள்ளத்திற்குள் சாலை தெலுங்குபாளையம், பனைமரத்துார் மெயின் ரோடு, சாலையே இல்லாத அளவிற்கு பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. இதில், தண்ணீர் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பெரிய வாகனங்கள் தடுமாறி செல்கையில், பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.
- செல்வராஜ், தெலுங்குபாளையம்.
வீணாகும் குடிநீர் கணபதி, சத்தி ரோடு, இந்தியன் வங்கி முன்பு குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக சாக்கடையில் தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. சாலையோரம் குழியில் தேங்கியுள்ள தண்ணீரில், யாரேனும் விழுவதற்கும் வாய்ப்புள்ளது.
- முத்துக்குமார், கணபதி.
விபத்து அபாயம் நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு, பூச்சியூர், வரசித்தி விநாயகர் கோவில் முன்புறம், நீர்வழி ஓடை தடுப்பு சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. இரவு நேரங்களில் சாலையோரம் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது.
- மணிமாலா,
நரசிம்மநாயக்கன்பாளையம்
.
சாக்கடை அடைப்பு கோவை மாநகராட்சி, 82வது டிவிசன் அய்யன்னா கவுடர் வீதியில், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. சாக்கடையை ஆக்கிரமித்து எழுப்பப்படும் கட்டுமானங்களால், சரிவர துார்வார முடியவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., வரை, பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- கிரிஷ், 82வது டிவிசன்.
சேதமடைந்த ரோடு விளாங்குறிச்சி முதல் ஆர்.கே.மில் ரோடு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் குழிகளில், மழைநீர் தேங்கி நிற்பதால் விபத்து நடக்கிறது. சேதமடைந்த சாலையால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. உயிரிழப்புகள் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- தங்கவேல், விளாங்குறிச்சி.
விழும் நிலையில் மரம் திருச்சி ரோடு, கான்வென்ட் பள்ளி எதிரில், சாக்கடை கால்வாய் உள்ளே பெரிய மரம் ஒன்று வளர்ந்துள்ளது. கால்வாயை சரியாக துார்வார முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. கால்வாய் தண்ணீர் செல்வதால் அடிப்பகுதி வலுவிழுந்து உள்ளது. காய்ந்த மரத்தின் கிளைகள் அடிக்கடி முறிந்து விழுகிறது. மரம் விழும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
- முருகேசன், ராமநாதபுரம்.
அடிக்கடி பழுதாகும் விளக்கு சரவணம்பட்டி முதல் கரட்டுமேடு வரை, கடந்த ஒரு வருடமாக தெருவிளக்கு எரியவில்லை. அடிக்கடி தெருவிளக்கு பழுதாவதால், இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
- மோகன்ராஜ், சரவணம்பட்டி.
தெருவிளக்கு பழுது கணபதி, கே.கே.நகர், 20வது வார்டு, சாய் கிருஷ்ணா மஹால் ரோட்டில் உள்ள, ' எஸ்.பி - 54, பி - 35' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. பலமுறை புகார் செய்தும் தெருவிளக்கு சரிசெய்யப்படவில்லை.
- ராஜ், கணபதி.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை செல்வபுரம், அரங்கநாயகம் நகர், பாலவிகாஸ் பள்ளி செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு கம்பங்களிலும் தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன. இவ்வழியே இரவில் செல்லவே பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அச்சப்படுகின்றனர். குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- சங்கர், செல்வபுரம்.
சறுக்கி விடும் மணல் படேல் ரோடு, 67வது வார்டு, சாஸ்திரி சாலை சந்திப்பில், குழாய் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடவில்லை. சாலையோரத்தில் மண் குவியலாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் விழுகின்றனர். மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மேலும் மோசமாகி விடுகிறது.
- ஸ்ரீநிவாசன், படேல் ரோடு.