தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ சரவணம்பட்டியில் குறுகிப்போன சாலையில் அடிக்கடி விபத்து அபாயம்

 சரவணம்பட்டியில் குறுகிப்போன சாலையில் அடிக்கடி விபத்து அபாயம்

 சரவணம்பட்டியில் குறுகிப்போன சாலையில் அடிக்கடி விபத்து அபாயம்


UPDATED : டிச 15, 2025 04:27 AM

ADDED : டிச 15, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2025 04:27 AM ADDED : டிச 15, 2025 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விபத்திற்கு வாய்ப்பு சத்தி ரோடு

சரவணம்பட்டி, துடியலுார் ரோடு சந்திப்பில், பேருந்து நிறுத்தம் அருகே கேஸ் குழாய் பதிப்பிற்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் குழியை மூடவில்லை. குறுகிப்போன சாலையில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

- ஸ்ரீனிவாசலு:

குடிநீரின்றி தவிப்பு

சரவணம்பட்டி, பத்தாவது வார்டில், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். புகார் செய்தும் நடவடிக்கையில்லை. சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஸ்ரீனிவாசலு:

சேதமடைந்த சாக்கடை

சீரநாயக்கன்பாளையம், 20வது வார்டு, திலகர் இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே உடைந்த நிலையில் உள்ள சாக்கடையால் அடைப்பு ஏற்படுகிறது. எங்கும் மேடு, பள்ளமாக பழுதடைந்திருக்கும் சாலையால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

- பிரவீனா:

வடியாத கழிவுநீர்

சோமையம்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், ஐந்தாவது வார்டு, ராஜலட்சுமி நகர் பகுதியில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், இதில் கழிவுநீர் சரியாக செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- மனோஜ்:

போக்குவரத்திற்கு இடையூறு

சுந்தராபுரம் சிக்னலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி வியாபாரமும் நடக்கிறது. வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்படுகிறது.

- சிவராமன்:

பள்ளத்தால் அபாயம்

வடவள்ளி, டாட்டா நகர், சாய்பாபா கோவில் எதிரே சாலையில் நீண்ட பள்ளம் உள்ளது. சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படவில்லை. பாதசாரிகள் விழும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும் தடுமாறுகின்றனர். குழியை விரைந்து மூட வேண்டும்.

- ஜெயந்தி:

வாய்க்காலை சுத்திகரிக்கணும்

குனியமுத்துார், 87வது வார்டு, அரசு பள்ளி அருகே, புட்டுவிக்கி வாய்க்காலில், பிளாஸ்டிக் குப்பை, மதுபாட்டில் மற்றும் குப்பை குவிந்துள்ளது. அடர்த்தியாக புதர்களும் வளர்ந்துள்ளதால் தண்ணீர் அடைத்து நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி மாணவர்களும் பாதிப்படைவதால் விரைந்து சுத்தம் செய்ய வேண்டும்.

- விசாலி:

நாசமாகும் குறிச்சி குளம்

குறிச்சி பூங்கா தடுப்புவேலிகளை சிலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆங்காங்கே உடைத்துள்ளனர். குளத்தின் ஒரத்தில் மூட்டை, மூட்டையாய் கழிவுகள் குவிந்துகிடக்கிறது. சிலர் குளத்தின் ஓரப்பகுதியில் தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விசாலி: சாலையில் ஓடும் கழிவுநீர் வெள்ளக்கிணறு, ஹவுசிங் யூனிட் ரோடு, டி.என்.எச்.பி., காலனி பகுதியில் அமைந்துள்ள அப்பார்ட்மெண்டிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. தொடர்ச்சியாக புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை.

- ரமேஷ்:

கடும் துர்நாற்றம்

பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார், 87வது டிவிசன் பகுதியில் சாலையோரம் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. நாள்கணக்கில் தேங்கிக்கிடக்கும் கழிவுகளால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க தகுந்த நடவடிக்கை வேண்டும்.

- விஷ்ணு:

அச்சத்தில் வாகன ஓட்டிகள்

மதுக்கரை மார்க்கெட் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இச்சாலையில் பாலத்தின் இறக்கத்திலிருந்து குரும்பபாளையம் பிரிவு வரை தெருவிளக்கு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

- நாராயணன்:

சுகாதார சீர்கேடு

இடையர்பாளையம் ரோடு, மாச்சம்பாளையத்தில் உள்ள பொது குடிநீர் குழாய் அருகே அமைக்கப் பட்டுள்ள கான்கிரீட் தளம் பெயர்ந்து பராமரிப்பின்றி உள்ளதால், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு எற்பட்டுள்ளது. இதனால் அங்கு குடிநீர் பிடிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

- கிருஷ்ணன்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us