/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் ஓட்டுநர்கள்!
/
ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் ஓட்டுநர்கள்!
ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் ஓட்டுநர்கள்!
ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் ஓட்டுநர்கள்!
ADDED : ஆக 25, 2025 09:18 PM

கால்நடைகள் உலா பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே, ரோட்டின் நடுவில் கால்நடைகள் உலா வருவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
--- டேவிட், பொள்ளாச்சி.
மின்விளக்கு அமைக்கப்படுமா? கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ரோட்டில், மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், ரயில் பயணியர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
கால்வாய் சேதம் கிணத்துக்கடவு அரசு பள்ளி மைதானம் அருகே, சர்வீஸ் ரோட்டோரம் உள்ள கால்வாய் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் கால்வாயில் விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இதை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- ரகு, கிணத்துக்கடவு.
ரோடு படுமோசம் பொள்ளாச்சி, நகராட்சி அலுவலக ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியில் செல்லும் போது தடுமாறுகின்றனர். இதை தவிர்க்க வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- தர்மராஜ், பொள்ளாச்சி.
விதிமீறும் வாகனங்கள் வால்பாறை அரசு கல்லூரி நுழைவுவாயில் அருகே, விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வழியில் செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, ரோட்டோரம் ஆட்டோக்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சபரி, வால்பாறை.
பாலத்தில் மீண்டும் சேதம் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் பெயர்ந்து இருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரும்பு சட்டம் சீரமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரும்பு சட்டம் பெயர்ந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சீரமைக்க வேண்டும்.
-- ஹரிஹரன், பொள்ளாச்சி.
சுகாதாரம் பாதிப்பு உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. காலை நேரங்களில் கொசுத் தொல்லை அதிகரித்து, நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
- வெங்கடேஷ், உடுமலை.
போக்குவரத்துக்கு இடையூறு தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்தின் வெளிப்புறம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், உடுமலை.
விதிமீறும் வாகனங்கள் உடுமலை, பழனியாண்டவர் நகர் ரவுண்டானா அருகே வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. மாலை நேரங்களில் அவ்வழியாக நடைபயிற்சி செல்வோர் வேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்களால் அச்சப்படுகின்றனர்.வேகத்தடை அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
- வாணி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை உடுமலை, தளிரோடு, காந்தி சவுக் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால் திருட்டு ஏற்படும் அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.
- நந்தகோபால், உடுமலை.
போக்குவரத்துக்கு இடையூறு உடுமலை, பழனிரோட்டில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து இதனால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது இரண்டுசக்கர வாகன ஓட்டுநர்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் தடுமாறுகின்றனர்.
- ஜெயந்தி, உடுமலை.
ஓட்டுநர்கள் பாதிப்பு உடுமலை எம்.பி., நகரில் பாதி ரோடு போடப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு, உடுமலை.