/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகை; விபத்து நடக்க வாய்ப்பு
/
ரோட்டில் சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகை; விபத்து நடக்க வாய்ப்பு
ரோட்டில் சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகை; விபத்து நடக்க வாய்ப்பு
ரோட்டில் சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகை; விபத்து நடக்க வாய்ப்பு
ADDED : மே 11, 2025 11:55 PM

அறிவிப்பு பலகை சேதம்
பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், ஆச்சிபட்டி அருகே ரோட்டோரம் உள்ள அறிவிப்பு பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியில் செல்லும் வாகனங்கள் தவறுதலாக இந்த பலகை மீது மோதி விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும்.
-- குமார், பொள்ளாச்சி.
தடுப்புகளை சீரமைக்கணும்
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில், சென்டர் மீடியம் தடுப்புகள் ஆங்காங்கே வளைந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் மக்கள் சிலர் ரோட்டை கடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கவனித்து தடுப்புகளை சீரமைக்க முன்வர வேண்டும்.
-- கார்த்தி, கோவில்பாளையம்.
ரோடு சேதம்
கோதவாடி பிரிவிலிருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோடு, சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும், தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவாக சீரமைப்பு செய்ய வேண்டும்.
- ஆனந்த், கிணத்துக்கடவு.
விதிமீறும் வாகன ஓட்டுநர்கள்
கிணத்துக்கடவு வடசித்தூர் ரோட்டில், லட்சுமி நகர் பகுதியில் ரோட்டின் வளைவு அருகே வைக்கப்பட்டுள்ள டிவைடர்களை, சில வாகன ஓட்டுநர்கள் ரோட்டோரம் நகர்த்தி வைத்து விட்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலீசார் இதை கண்காணித்து சரி செய்ய வேண்டும்.
-- மகேந்திரன், கிணத்துக்கடவு.
பராமரிப்பு இல்லை
உடுமலை நகராட்சி செல்லம்மாள் லே-அவுட் பூங்கா பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால், அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பூங்காவை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
பூங்காவில் முட்கள்
உடுமலை நகராட்சி வேலன்நகர் நகராட்சி பூங்காவிற்குள் யாரும் செல்ல முடியாதவாறு வேலிக்கருவை முட்களை போட்டுள்ளனர். இதனால், மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இதை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தசாமி, உடுமலை.
தெருவிளக்குகள் எரியவில்லை
உடுமலை, சிவலிங்கம் பிள்ளை லே-அவுட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இரவில் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்த வீதியில் நடப்பதற்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
- ராதிகா, உடுமலை.
உயர்மின் விளக்குகள் பழுது
உடுமலை- பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் உள்ள உயர்மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- மோகன், உடுமலை.
மோசமான ரோடு
உடுமலை, கணக்கம்பாளையம் பி.வி., லே-அவுட் பகுதியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி குளமாக மாறியுள்ளது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தொலைதுாரம் சென்று வருகின்றனர்.
- ராகவன், உடுமலை.
தாறுமாறாக நிறுத்தம்
உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் ஸ்டாப்பில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்சுக்கு காத்திருப்பதற்கும் இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். பஸ் வரும் நேரத்தில் வாகனங்களை கடந்து வர முடியாமல் தவறவிடுகின்றனர்.
- மாரிமுத்து, உடுமலை.
ரோட்டோரம் குப்பை குவியல்
பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி, மாரியம்மன் கோவில் பின்புறம் ரோட்டோர பகுதிகளில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக இங்குள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஜனார்த்தனன், பொள்ளாச்சி.