/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
மேம்பால சுவர்களில் வளரும் செடிகள்; வாகனங்களுக்கு இடையூறு
/
மேம்பால சுவர்களில் வளரும் செடிகள்; வாகனங்களுக்கு இடையூறு
மேம்பால சுவர்களில் வளரும் செடிகள்; வாகனங்களுக்கு இடையூறு
மேம்பால சுவர்களில் வளரும் செடிகள்; வாகனங்களுக்கு இடையூறு
ADDED : ஜூலை 14, 2025 08:02 PM

மேம்பாலத்தில் செடிகள்
கிணத்துக்கடவு மேம்பால சுவர்கள் ஓரம் செடிகள் வளர துவங்கியுள்ளது. பெரிதாக வளர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து நடப்பதற்கு முன், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், இதை பணியாளர்கள் அகற்ற வேண்டும்.
--- கவின், கிணத்துக்கடவு.
இடைஞ்சலான ரோடு
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி ஜீவா வீதியில் உள்ள ரோட்டோரம் கால்வாயில், அதிகமான அளவில் கழிவு நீர் தேக்கம் அடைந்திருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகின்றன. சில நேரங்களில் கால்வாயில் வாகனத்தின் ஒரு பகுதி இறங்குவதால் போக்குவரத்து பாதிப்பு உண்டாகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
- - ஸ்ரீதர், பொள்ளாச்சி.
யூ டர்ன் மூடப்படுமா
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள, யூ டர்ன் திசையில் அதிக அளவு வாகனங்கள் ஒன் வே வழியாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இந்த யூ டர்ன் பகுதியை நிரந்தரமாக மூட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - சுந்தர், கிணத்துக்கடவு.
ரோடு சேதம்
பொள்ளாச்சி மரப்பேட்டை பார்க் முன்புறம் உள்ள, ரோட்டின் நடுவே சேதம் அடைந்துள்ளதால் வாகனங்கள் இவ்வழியாக சென்று வரும்போது சிரமத்துக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- விஜய், பொள்ளாச்சி.
இடநெருக்கடி
உடுமலை பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பஸ் இட நெருக்கடியால் உள்ளே செல்ல முடியாமல் பைபாஸ் ரோட்டில் நிற்கிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தசாமி, உடுமலை.
'குடி'மகன் கள் தொல்லை
உடுமலை, பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி முழுவதும் குடிமகன்களின் இடமாக மாறிவிட்டது. ரோட்டில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் குடிமகன்கள் நிலையில்லாமல் மோதும் வகையில் நடந்துசெல்கின்றனர். இரவில் வாகனங்களின் மீது விழும் வகையில் செல்வதால் வாகன ஓட்டுநர்களும் விபத்துக்குள்ளாகின்றனர். மது அருந்தும் டம்ளர் உள்ளிட்ட கழிவுகளையும் அப்பகுதில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
- சுவாதி, உடுமலை.
மண் ரோட்டால் பாதிப்பு
உடுமலை தாராபுரம் ரோட்டில், ஏரிபாளையத்திலிருந்து குறிஞ்சேரி செல்லும் ரோடு மண் ரோடாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, ராஜேந்திரா வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் ரோட்டில் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள் வெளியில் சென்று வருவதற்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.
- ஜெயக்குமார், உடுமலை.
நடைபாதை சேதம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வெளியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாததால், நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதில் செல்வோர் தவறி அதில் விழும் வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சியினர் நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
- ராஜா, உடுமலை.
பராமரிப்பு இல்லை
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், அங்கு குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நிழற்கூரையை பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கனகராஜ், உடுமலை.
பகலில் எரியும் தெரு விளக்கு
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலை ஓரம், பல இடங்களில் பகல் நேரத்தில் தெருவிளக்கு எரிந்தபடி இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகும் வாய்ப்பு அதிக அளவு உள்ளது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பாலாஜி, பொள்ளாச்சி.