/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மழை நீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் கலக்கம்!
/
ரோட்டில் மழை நீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் கலக்கம்!
ரோட்டில் மழை நீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் கலக்கம்!
ரோட்டில் மழை நீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் கலக்கம்!
ADDED : ஜூன் 29, 2025 11:12 PM

மரக்கிளையை வெட்டணும்!
பொள்ளாச்சியில் இருந்து, நடுப்புணி செல்லும் ரோட்டில், சேர்வைக்காரன்பாளையம் அருகே ரோட்டோரம் உள்ள பெரிய ஆலமரக்கிளை ரோட்டில் நீட்டியபடி இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலையில் உள்ளது. எனவே, இந்த மரக்கிளையை வெட்டி அகற்றம் செய்ய வேண்டும்.
-- திருமுருகன், பொள்ளாச்சி.
மழைநீர் தேங்குது!
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு ரயில்வே மேம்பாலம் துவங்கும் இடத்தில், என்.ஜி.எம்., கல்லுாரி அருகில், பிரதான ரோட்டில் மழை நீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. இதனால், ரோடு சேதமடைவதுடன், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுவது தொடர்கதையாக உள்ளது. அங்கு, மழைநீர் தேங்காதவாறு, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
-- ஈஸ்வரன், பொள்ளாச்சி.
தொடர் வேகத்தடை தேவையா?
பொள்ளாச்சி, பத்திரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட் அருகே, ரோட்டில் தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த தொடர் வேகத்தடையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
குப்பையை அகற்றணும்!
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோட்டோரம் உள்ள மாமாங்கம் நீரோடையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டுள்ளது. அக்கழிவு தண்ணீரில் மிதந்த படி இருப்பதால், தண்ணீர் மாசுபடவும், அருகில் உள்ள விளைநிலம் பாதிகப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீரில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சந்தோஷ், கிணத்துக்கடவு.
ரோட்டை சீரமையுங்க
விருகல்பட்டி - வல்லக்குண்டாபுரம் கிராம இணைப்பு ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விக்னேஷ், உடுமலை.
ரோட்டில் வழிந்தோடும் மழை நீர்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிபட்டியில் ரோட்டோரம் வடிகாலில் இருந்து, ரோட்டில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியில் செல்பவர்கள் பலர் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, ரோட்டில் மழை நீர் செல்லாமல், வடிகாலில் செல்லும் வகையில், துார்வாரி பராமரிக்க வேண்டும்.
- பிரதீப், பொள்ளாச்சி.
பணிகளை விரைந்து முடிங்க
உடுமலை - தாராபுரம் ரோடு புதிதாக அமைக்கப்பட்டு வரும்நான்கு வழி சாலை பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், போக்குவரத்து பிரச்னை ஏற்படுவதோடு, வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, காந்திநகர் பகுதியில் குடியிருப்புகளில் தேங்கும் கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிகமான புகை பரவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காற்று வீசும் நேரங்களில் கழிவுகளிலிருந்து தீப்பொறிகளும் பறக்கின்றன. ஆபத்தான சூழலாக மாறுகிறது.
- தினேஷ், உடுமலை.
மெகா பள்ளம்
உடுமலை, ஐஸ்வர்யா நகர் மற்றும் யு.கே.சி நகர் சந்திப்பு ரோட்டில் 'மெகா' சைஸ் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளம் ரோட்டின் ஓரமாக இருப்பதால் வாகனங்கள் திரும்பும் போதும், ஒதுங்கி செல்லும் போதும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- லாவண்யா, உடுமலை.
வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம் எஸ்.வி.புரம் பகுதியில் குடியிருப்புகளின் அருகே வேகத்தடை தேவையில்லாத இடங்களிலும் போடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வரும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- சேகர், கணக்கம்பாளையம்.
சுகாதாரம் சீ ர் கே டு
உடுமலை, வ.உ.சி.வீதி பசுபதி வீதி சந்திப்பில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதுமே சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
- பாலகுமார், உடுமலை.
ரோட்டில் பள்ளம்
கிணத்துக்கடவு, பகவதிபாளையம் செல்லும் வழியில் தனியார் கல்லூரி அருகே, ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
--- கோகுல், கிணத்துக்கடவு.