/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; மக்கள் பாதிப்பு
/
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 18, 2025 09:02 PM

காயும் செடிகள் உடுமலை - பழநி ரோட்டில் மையத்தடுப்பில், நெடுஞ்சாலைத்துறையால் செடிகள் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் அச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால், காய்ந்து வருகின்றன. அவற்றிற்கு தண்ணீர் ஊற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுபாஷ், உடுமலை.
ரோட்டில் நீர் தேக்கம் தேசிய நெடுஞ்சாலையில், பழநி ரோட்டில் ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, தண்ணீர் தேங்காமல், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், உடுமலை.
எரியாத தெருவிளக்குகள் உடுமலை,சிவலிங்கம் பிள்ளை லே -அவுட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவில் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்த வீதியில் நடப்பதற்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
- ராதிகா, உடுமலை.
மின்விளக்குகள் பழுது உடுமலை - பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- மோகன், உடுமலை.
மோசமான ரோடு உடுமலை, கணக்கம்பாளையம் எஸ்.வி.புரம் பகுதியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரோட் டின் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கு கிறது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தொலைதுாரம் சென்று வருகின்றனர்.
- ராகவன், உடுமலை.
வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் ஸ்டாப்பில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்சுக்கு காத்திருப்பதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். பஸ் வரும் நேரத்தில் வாகனங்களை கடந்து வர முடியாமல் தவற விடுகின்றனர்.
- மாரிமுத்து, உடுமலை.
சிக்னல்களில் விளம்பரம் பொள்ளாச்சி, சப் -- கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரோட்டோர சிக்னல்களில் விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளது. இவைகள் காற்றுக்கு வேகமாக ஆடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, சிக்னலில் இருக்கும் விளம்பர பதாகைகளை அகற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
ரோடு சேதம் பொள்ளாச்சி கடைவீதி செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால், பைக் ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இவ்வழியில் செல்லும் போது பைக் ஓட்டுநர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- ரஞ்சித், பொள்ளாச்சி.
தேங்கும் மழைநீர் பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரசம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ரோட்டில் தண்ணீர் தேங்கும் பகுதியை சமப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சுரேஷ், கிணத்துக்கடவு.
படகு இல்லம் திறக்கப்படுமா? வால்பாறையில் அமைக்கப்பட்ட படகு இல்லம் செயல்படாமல் இருக்கிறது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதை சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பொன்குமரன், வால்பாறை.
குப்பையில் டிவைடர்கள் கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் வளைவு பகுதி அருகே, விபத்தை தடுக்க டிவைடர்கள் வைக்கப்பட்டது. ஆனால், இந்த டிவைடர்கள் குப்பை போன்று ரோட்டோரம் போடப்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை தடுக்க தேவைப்படும் இடங்களில் டிவைடர்கள் வைக்க வேண்டும்.
ஆனந்த், கிணத்துக்கடவு.