/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோடு அமைக்கும் பணிகள் தாமதம்; பொதுமக்கள் பாதிப்பு
/
ரோடு அமைக்கும் பணிகள் தாமதம்; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : மே 19, 2025 11:23 PM

ரோட்டை போடுங்க
உடுமலை அருகே மருள்பட்டி - பாலப்பம்பட்டி ரோடு போடும் பணிக்காக கற்கள் போடப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரோட்டை போட கண்ணமநாயக்கனுார் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரன், பாலப்பம்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, சங்கரன் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். குடியிருப்புகளின் முன் கூட்டமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- ஜெயராணி, உடுமலை.
கொசுத்தொல்லை
உடுமலை, பிரசன்னவிநாயகர் கோவில் ரோட்டில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றாம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது.
- ராஜ்குமார், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, சர்கார் வீதியில் குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் தீ வைத்து எரிக்கின்றனர். புகை அதிகமாக பரவுவதால் பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்வதற்குள் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மேலும், அருகிலுள்ள குடியிருப்போரும் புகை பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
- விஜயலட்சுமி, உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை நகராட்சி ஸ்ரீ நகரில் மழை நீர் செல்லும் வடிகால் துார்வாரப்படாததால், குப்பை, நிறைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்துக்கொள்கிறது. எனவே, நகராட்சியினர் வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகனங்களின் வேகத்தால் விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை கட்டுபடுத்த எதிர்பார்க்கின்றனர்.
- ரவிக்குமார், உடுமலை.
பகலில் ஒளிருது
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உள்ள மின்விளக்கு பகல் நேரத்தில் அணையாமல் எரிகிறது. இதனால் மின்சாரம் விரையமாகிறது. எனவே, அதிகாரிகள் இதை கவனித்து, மின்விளக்கை பகலில் அணைத்து வைக்க வேண்டும்.
- ரமேஷ், கிணத்துக்கடவு.
மின்கம்பத்தை இடம்மாற்றணும்!
குருநல்லிபாளையத்தில் இருந்து, நெகமம் செல்லும் ரோட்டில் மின் கம்பம் ஒன்று ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் கனரக வாகனங்கள் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, மின்வாரியத்தினர் இந்த மின்கம்பத்தை மாற்று இடத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், நெகமம்.
கழிவுநீர் தேங்குது
பொள்ளாச்சி பாரதி வீதியில் கடைகள் அதிகம் உள்ள இடத்தில், கால்வாயில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக தூய்மை செய்ய வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
ரோட்டோரம் மண் குவியல்
பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில், சென்டர் மீடியன் ஒட்டி மண் அதிகளவு குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனித்து, உடனடியாக மண் குவியலை அகற்ற வேண்டும்.
-- சிவா, பொள்ளாச்சி.
ரோட்டில் விளம்பரம்
பொள்ளாச்சியில், போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் தனியார் கடை விளம்பர போர்டுகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோட்டோரம் வாகனங்கள் பார்க்கிங் செய்ய சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற செயல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டேனியல், பொள்ளாச்சி.