/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
சுரங்கப்பாதையில் ரோடு சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
சுரங்கப்பாதையில் ரோடு சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
சுரங்கப்பாதையில் ரோடு சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
சுரங்கப்பாதையில் ரோடு சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : ஏப் 21, 2025 10:30 PM

செடிகளை அகற்றணும்
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால், மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
கழிவுகள் தேக்கம்
உடுமலை, ஏரிப்பாளையம் அருகே ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. கழிவுகள் திறந்த வெளியில் தேங்கிக்கிடப்பதால், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றமும் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
- சரண்யா, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, அண்ணபூரணி நகரில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கும் வழியில்லாமல் இருள் சூழ்ந்துள்ளது.
- பாரதி, உடுமலை.
ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை, தளிரோடு சுரங்கப்பாதையில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதில் மழைநீரும் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லாமல் வாகன ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் சுரங்கபாதையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
- சிவநாதன், உடுமலை.
வீணாகும் மின்சாரம்
உடுமலை பழநி ரோட்டில், மையத்தடுப்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகளில் நேற்று பகல் நேரத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனால், மின்சாரம் வீணாகிறது. எனவே, நகராட்சியினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரவன், உடுமலை.
வாகனங்களால் இடையூறு
உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள வணிக கடைகளுக்கு வருவோர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மற்ற வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. பரபரப்பான நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- ஜெயந்தி, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரின் முக்கிய பகுதிகளில், ரோட்டோரம் அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. இதை போலீசார் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- விகாஸ், வால்பாறை.
சர்வீஸ் ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சியில், கோவை செல்லும் வழியில் கோவில்பாளையம் சர்வீஸ் ரோட்டில் பள்ளம் இருப்பதால், இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டில் சேதம் அடைந்த பகுதியை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்க வேண்டும்.
- கணேசன், கோவில்பாளையம்.
குப்பை அகற்றப்படுமா?
பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில், ஆங்காங்கே குப்பை கொட்டப்படுகிறது. இதனால் குப்பை கொட்டியுள்ள இடத்தில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தூய்மை பணியாளர்கள் இதை கவனித்து உடனடியாக ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.
-- டேனியல், பொள்ளாச்சி.
மின்விளக்கு இல்லை
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில், மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் இவ்வழியில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இங்கு மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிகண்டன், கிணத்துக்கடவு.
புதர் சூழ்ந்த வழித்தடம்
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழித்தடத்தில், இரண்டு பகுதியிலும் அதிக அளவு செடிகள் வளர்ந்திருப்பதால் இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி புதர் செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
- கோகுல், கிணத்துக்கடவு.

