/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடையில் பொங்குது கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
பாதாள சாக்கடையில் பொங்குது கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
பாதாள சாக்கடையில் பொங்குது கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
பாதாள சாக்கடையில் பொங்குது கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூலை 20, 2025 10:32 PM

ரோட்டில் கழிவு நீர்
பொள்ளாச்சி ---- கோட்டூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, ரோட்டில் பாதாள சாக்கடை ஆள்இறங்கும் குழியில் இருந்து கழிவு நீர் அதிக அளவில் வழிந்தோடுகிறது. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகனம் ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
தெருவிளக்கு பழுது
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு தனியார் கல்லூரி அருகே, மேம்பாலம் துவங்கும் இடத்தில் இருக்கும் தெருவிளக்கு பழுதடைந்துள்ளது. இதன் காரணத்தால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இந்த தெருவிளக்கை விரைவில் சரி செய்ய வேண்டும்.
-- நிஷா, பொள்ளாச்சி.
பகலில் ஒளிருது
பொள்ளாச்சி, ஜோதிநகர் சிவன் கோவில் பகுதியில் இருக்கும் தெருவிளக்கு, பகல் நேரத்தில் அணையாமல் எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து, பகல் நேரத்தில் தெருவிளக்கு எரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஆறுமுகம், பொள்ளாச்சி.
பூட்டியே கிடக்குது
உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆண்கள் கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல், பூட்டியே கிடப்பதால், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயணியர் பயன்படுத்துகின்றனர். அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமணன், உடுமலை.
வேகத்தடை தெரியலை
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு வேகத்தடை இருப்பதே தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் அமைக்க வேண்டும். வேகத்தடை அருகேயுள்ள பள்ளங்களையும் சீரமைக்க வேண்டும்.
-- அலெக்ஸ், பொள்ளாச்சி.
பரிதாப நிலையில் ஓடை
உடுமலை பெதப்பம்பட்டியில், உப்பாறு ஓடையில் ஊராட்சி நிர்வாகத்தால், கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அஙகுள்ள தடுப்பணை முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் குவிந்து கிடக்கிறது. குப்பையை தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது. குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், உடுமலை.
குடிநீர் வசதி தேவை
மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து வந்து ரயிலுக்கு காத்திருக்கும் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். மதுரை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.
-ராமலிங்கம், உடுமலை.
இருட்டில் தவிப்பு
உடுமலை நகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட ருத்தரப்பநகர், மூன்றாவது வீதியில், ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்களுக்கு, பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
-ராம்குமார், உடுமலை.
வெயிலில் தவிப்பு
உடுமலை தேவனுார்புதுார் ரோடு சந்திப்பில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை வசதியில்லை. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து, பொள்ளாச்சி, உடுமலை பகுதிக்கு செல்ல மக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். உடுமலை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணகுமார், உடுமலை.
சேதமடைந்த மின்கம்பம்
கிணத்துக்கடவு, அண்ணா நகர் முதல் தெரு குடியிருப்பு பகுதியில், ரோட்டோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கிறது. இதை மாற்றக்கோரி மின் வாரிய அலுவலரிடம் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை. இந்த மின்கம்பம் கீழே விழும் முன் மாற்றியமைக்க வேண்டும்.
-- சின்னசாமி, கிணத்துக்கடவு.