/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோடெல்லாம் பெரும் பள்ளம்; மழைக்கு முன் சீரமைக்க வேண்டும்!
/
ரோடெல்லாம் பெரும் பள்ளம்; மழைக்கு முன் சீரமைக்க வேண்டும்!
ரோடெல்லாம் பெரும் பள்ளம்; மழைக்கு முன் சீரமைக்க வேண்டும்!
ரோடெல்லாம் பெரும் பள்ளம்; மழைக்கு முன் சீரமைக்க வேண்டும்!
ADDED : ஜூன் 03, 2025 12:24 AM

கல்வெட்டு சேதம்
கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சியில், அரசு சுகாதார நிலையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோடு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜ்குமார், வடசித்தூர்.
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், இரு பகுதியிலும் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
ரோட்டில் மட்டைகள்
வடசித்தூர் -- நெகமம் செல்லும் வழியில் ஆங்காங்கே ரோட்டின் ஓரத்தில், தென்னை மட்டைகள் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் செல்ல சிரமம் ஏற்படுவதுடன், இவ்வழியில் செல்ல அச்சப்படுகின்றனர். இந்த மட்டைகளை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- பூபாலன், நெகமம்.
தடுப்பு அமைக்கணும்!
கிணத்துக்கடவு - பொள்ளாச்சி செல்லும் சர்வீஸ் ரோட்டில், தனியார் பங்க் அருகே ரோட்டோரம் பள்ளம் இருப்பதால் இரவு நேர பயணத்தின் போது, வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பள்ளம் உள்ள பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும்.
- ரஞ்சித், கிணத்துக்கடவு.
சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் பலர் இவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- டேனியல், பொள்ளாச்சி.
ரோடெல்லாம் பள்ளம்
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா முன்பகுதியில், வேகத்தடை அருகே பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, சுற்று பகுதி ரோடு முழுக்க அதிக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பருவமழை இடைவெளி விட்டிருக்கும் நேரத்தில், ரோட்டில் 'பேட்ஜ் ஒர்க்' பணி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
- கிருஷ்ணன், பொள்ளாச்சி.
வீணாகும் குடிநீர்
உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கச்சேரி ரோட்டில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதை நகராட்சியினரும், குடிநீர் வடிகால்துறையினரும் சரிசெய்ய வேண்டும்.
- கார்மேகம், உடுமலை.
ஒளிராத தெருவிளக்குகள்
உடுமலை, திருப்பூர் ரோடு வி.ஜி. ராவ் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் வாகன ஒட்டுநர்கள் பிரதான சாலையில் செல்வதற்கு அச்சப்படும் நிலையில் இருள் சூழ்ந்துள்ளது. ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகளும் அதிகம் நடக்கிறது.
- பாஸ்கர், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்கள் கழிவுகளை இழுத்து வந்து வீடுகளின் முன் குவிப்பதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகிறது.
- தேவிகா, உடுமலை.
சேதமான ரோடு
உடுமலை, நெல்லுக்கடை வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
- ரவிக்குமார், உடுமலை.
வாகனங்கள் பாதிப்பு
கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பி.வி. லே அவுட் பகுதியில் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மழை பெய்யும் நாட்களில் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்வதற்கும் முடியாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.
- ரங்கநாதன், கணக்கம்பாளையம்.
ரோட்டில் ஆக்கிரமிப்பு
உடுமலை, திருப்பூர் ரோட்டில் கடைகள், பொருட்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.