/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
கே.கே.புதுாரில் வழுக்கி விழாத யாருமே இல்லை; சாலை முழுவதும் சேறு... சரி பண்ணுவது யாரு?
/
கே.கே.புதுாரில் வழுக்கி விழாத யாருமே இல்லை; சாலை முழுவதும் சேறு... சரி பண்ணுவது யாரு?
கே.கே.புதுாரில் வழுக்கி விழாத யாருமே இல்லை; சாலை முழுவதும் சேறு... சரி பண்ணுவது யாரு?
கே.கே.புதுாரில் வழுக்கி விழாத யாருமே இல்லை; சாலை முழுவதும் சேறு... சரி பண்ணுவது யாரு?
ADDED : ஜூன் 30, 2025 11:00 PM

பள்ளத்தால் விபத்து
பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே சாலை வளைவில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. வளைவில் திரும்பும் வாகனங்கள் பள்ளத்தால் விழுகின்றன. வெறும் மண் கொண்டு மூடுவதால் மழையில் மண் அரித்து மீண்டும் குழியாகிறது. பள்ளங்களை தார் கொண்டு நிரந்தரமாக மூட வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.
தெருக்களில் மழைநீர் குளம்
வீரகேரளம், ஆசிரியர் காலனி மண் சாலை மேடும், பள்ளமாக உள்ளது. குழிகளில் மழைநீர் தேங்கி குளம் போல தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதியும் இல்லை. வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை. சாலையில் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் வழுக்கி விழுகின்றனர்.
- காயத்ரி, வீரகேரளம்.
நாய்கள் தொல்லை
சிங்காநல்லுார், 58வது வார்டு, கே.பி.ஆர்., லே- அவுட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் செல்லவே அஞ்சுகின்றனர்.
- செல்வராஜ், சிங்காநல்லுார்.
அபாயகரமான பாலம்
மருதமலை, ஐ.ஓ.பி., காலனியில் உள்ள, பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சாலையோரம் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் மேலும் அபாயகரமானதாக உள்ளதால், பாலத்தில்விரைந்து தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்.
- உமாசங்கர், மருதமலை.
எரியா விளக்கு
செல்வபுரம், 7வது வார்டு, லாலா கார்டன் பகுதியில், 'எஸ்.பி - 5 பி - 8' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- ரத்தினகுமார், செல்வபுரம்.
வாகனஓட்டிகளுக்கு கடும் சிரமம்
சிங்காநல்லுார், அக்ரஹாரம் மேற்கு வீதியில் இரட்டை வீதி சந்திப்பு மற்றும் கோவில் வீதி சந்திப்புகளில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டமண்ணை அகற்றவில்லை. சாலையோரம் குவிந்துள்ளது. குடியிருப்புவாசிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
- சுந்தரசேன், சிங்கநால்லுார்.
படையெடுக்கும் பாம்புகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, அலமு நகர், சிறுவாணி நகர், கந்தா சூப்பர் மார்க்கெட் பின்புறம் புதர்மண்டி உள்ளது. இதில், பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்களின் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. அடிக்கடி வீடுகளுக்குள்ளும் வருகின்றன. குடியிருப்பு நடுவே உள்ள புதரை அகற்ற வேண்டும்.
- மதி, கோவைப்புதுார்.
நடைபாதையில் இடையூறு
ஆர்.எஸ்.புரம், டைட்டன் ஷோரும் அருகில், நடைபாதையில் இருந்த பெரிய மரம் அகற்றப்பட்டது. ஆனால், அடிப்பகுதியை முழுமையாக அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர்.நடைபாதைக்கு ஒரு அடிக்கு மேலே மரம் நீட்டிக்கொண்டுள்ளது. நடந்து செல்பவர்களுக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
- நசீர், ஆர்.எஸ்.புரம்.
போக்குவரத்து நெருக்கடி
போத்தனுார், சர்ச் ரோட்டில் தினமும் காலை, மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் காலை, மாலை வேளையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
குழியால் ஆபத்து
இடையர்பாளையம், 35வது வார்டு, காந்திநகர், விவேகானந்தர் வீதியில், குழாய் பதிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. கடந்த 10 நாட்களாக எந்த பணிகளும் நடைபெறவில்லை, குழியும் மூடவில்லை. குடியிருப்புவாசிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. குழந்தைகள் குழியில் விழுவதற்கு வாய்ப்புள்ளது.
- பிரகாஷ், இடையர்பாளையம்.
விழுந்துதான் கடக்கணும்
கவுண்டம்பாளையம், குப்பகோணம்புதுார், அன்னை இந்திரா நகரில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. வயல்வெளி போல சாலை காட்சியளிக்கிறது. குடியிருப்புவாசிகள் நடந்து செல்லவே முடியாத வகையில் ரோடு உள்ளது. விழாமல் சாலையை கடக்கவே முடியாது.
- பாலாஜி, கவுண்டம்பாளையம்.
இருளால் அச்சம்
கோவை மாநகராட்சி, 50வது வார்டு, ராஜேஸ்வரி நகர், இந்துஸ்தான் கல்லுாரி அருகே உள்ள 'எஸ்.பி - 41 பி - 13' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இருளால் விடுதி மாணவிகள் உள்ளிட்ட பெண்கள்,இந்தப்பகுதியை அச்சத்துடனே கடக்கின்றனர்.
- தேவதாஸ்,
ராஜேஸ்வரி நகர்.