/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
செல்வபுரத்தில் நிரம்பி வழிகிறது பாதாள சாக்கடை
/
செல்வபுரத்தில் நிரம்பி வழிகிறது பாதாள சாக்கடை
ADDED : செப் 21, 2025 11:24 PM

குழாய் உடைப்பு சேரன்மாநகர், ராகவேந்திரா அவென்யூ மெயின் வீதியில், சாவித்திரி நகர், மும்முனை சந்திப்பில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.
- வரதராஜன், ராகவேந்திரா அவென்யூ.
திறந்தவெளியில் குவியும் குப்பை வீரகேரளம், 40வது வார்டு, மேற்கு அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பாலித்தீன் பைகளை சாப்பிடுவதால், அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
- முருகேசன், வீரகேரளம்.
தெருவிளக்கு பழுது கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 64வது வார்டில், 'எஸ்.பி -38, பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்லவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- சிவக்குமார், 64வது வார்டு.
விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள் தடாகம் ரோடு, கே.என்.ஜி. புதுார் பிரிவிலிருந்து கே.என்.ஜி. புதுார் செல்லும் சாலை, ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் அருகே சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டிய இடத்தில் சாலை அரை அடி பள்ளமாக உள்ளது. வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றன, விபத்திலும் சிக்குகின்றனர்.
- பாலச்சந்தர், தடாகம் ரோடு.
நிரம்பி வழியும் சாக்கடை செல்வபுரம் வடக்கு, 78வது வார்டு, பிள்ளைமார் வீதியில் கடந்த ஆறு மாதமாக பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
- நாராயணன், செல்வபுரம்.
வடிகாலில் அடைப்பு திருச்சி ரோடு, மேம்பாலம் சுங்கம் பகுதியில் மழைநீர் வடிகால் குழிகள் அனைத்தும் அடைபட்டுள்ளது. பாலம் மேல் மண் மற்றும் குப்பை நிறைந்து வடிகால் அடைத்துள்ளது. இதனால், மழை சமயங்களில் பாலத்தில் தண்ணீர் ஆறாய் ஓடுகிறது.
- கவுதம், திருச்சி ரோடு.
குண்டும், குழியுமான ரோடு சின்னமேட்டுப்பாளையம், அத்திப்பாளையம் ரோடு, நான்காவது வார்டு, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடி சாலை அமைக்கவில்லை. குழாயும் உடைந்து சாலையில் தண்ணீர் செல்வதால் சேறும், சகதியுமாக உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.
- சந்தோஷ்குமார், சின்னமேட்டுப்பாளையம்.
இரவில் தொடரும் விபத்து காளப்பட்டி ரோடு, மஹா நகர், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, எம்.ஆர்.எம்., காம்பளக்ஸ் அருகே, சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. குழிகளாக இருக்கும் சாலையில் இரவு நேரங்களில் அதிகளவு விபத்து நடக்கிறது.
- ஸ்ரீனிவாசலு, மஹா நகர்.
சாய்ந்த கம்பம் கோவை மாநகராட்சி, 56வது வார்டு, ரோஸ் கோர்டன், சாந்தி சோசியல் சர்வீஸ் பள்ளி முன்பு இன்டர்நெட் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இதே நிலையில் உள்ளது. சாலையில் நடந்து செல்வோர் மீது விழுவதற்கு வாய்ப்புள்ளது.
- காந்தி, 56வது வார்டு.
மூடப்படாத குழிகள் சங்கனுார், 18வது வார்டு, எஸ்.பி கண்ணுசாமி வீதி, மூன்றாவது குறுக்கு சந்து, சங்கனுார் என்ற பகுதியில் சூயஸ் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அருகில் உள்ள பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பெற்றோர்களும், சைக்கிளில் வரும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
- அப்பாஸ், சாய்பாபாகோவில்.