நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எச்சரிக்கை போர்டு தேவை
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கூட்டுறவு சொசைட்டி வளைவு அருகே, எச்சரிக்கை போர்டு இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
சிவா, எறும்பூர்.
அடிக்கடி விபத்து
கிள்ளை- முடசல் ஓடை நெடுஞ்சாலைத்துறை சாலையில், சாலையோரங்களில் முள் வளர்ந்து சாலை வளைவுகளில் எதிர், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
குமார், முடசல் ஓடை.
பாராக மாறிய நிழற்குடை
விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள நிழற்குடைகள் திறந்தவெளி பாராக செயல்படுவதால், நெடுந்துார பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
தண்டபாணி, பெண்ணாடம்.

