தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி: கடலூர்

 புகார் பெட்டி: கடலூர்

 புகார் பெட்டி: கடலூர்


ADDED : ஜூன் 06, 2026 09:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன ஓட்டிகள் அச்சம்

பரங்கிப்பேட்டை, ரயில்வே கேட்டில் இருந்து பு.முட்லுார் வரை, நெடுஞ்சாலையில் மின்சார வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

-கார்த்தி, பு.முட்லுார்.

போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில் தினசரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சரவணன், விருத்தாசலம்.

காத்திருப்பு கூடம் சீரமைக்கப்படுமா?

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலா, விருத்தாசலம்.

ஆக்கிரமிப்பால் பயணிகள் சிரமம் வேப்பூர் கூட்டுரோடு மேம்பாலத்தின் கீழேயும், பஸ் நிறுத்தத்திலும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சிரமமடைகின்றனர்.

-அவினாஷ், வேப்பூர்.

சேதமடைந்த சாலைகள்

வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் தெருக்கள் தோறும் சிமெண்ட் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

-லட்சுமணன், ஐவதுகுடி.

சாலைகளில் மணல் குவியல்

வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் புழுதி மணல் குவிந்து கிடப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

-பிரபு, வேப்பூர்.

விபத்து அபாயம்

விருத்தாசலம் பாலக்கரையில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

- கணேஷ்குமார், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us