ADDED : ஜூலை 31, 2026 04:25 AM

மின் விளக்கு எரியுமா?
கடலுார், லாரன்ஸ் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் இரவில் மின்விளக்கு சரிவர எரியாமல் உள்ளதை சீரமைக்க வேண்டும்.
சுரேஷ், கம்மியம்பேட்டை.
புறநகர் பஸ் நிற்க நடவடிக்கை தேவை?
பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி, கடலுார், சென்னை செல்லும் புறநகர் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோக், பெண்ணாடம்.
பூங்கா பணி விரைந்து முடிக்கப்படுமா?
பெண்ணாடம் பேரூராட்சி, முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வக்குமார், பெண்ணாடம்.
பயணிகள் நிழற்குடை தேவை
சிறுபாக்கம் அடுத்த அடரி கிராம மக்களின் வசதிக்காக விருத்தாசலம் -- -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-முத்துசாமி, அடரி.
கழிவறை வசதி தேவை
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
-செல்வகுமார், விருத்தாசலம்.
வாய்க்கால் துார்வாரப்படுமா?
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆண்டிப்பாளையம் ஏரிக்கு நீர்வரத்து ஆதாரம் கொண்ட வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, துார் வார வேண்டும்.
--சிவக்குமார், ஆண்டிப்பாளையம்.
