ADDED : ஆக 31, 2026 08:40 AM
அ நிறம் | அளவு
மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?
பெண்ணாடம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பழுதான மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயபிரகாஷ், பெ.பொன்னேரி.
தள்ளுவண்டி கடைகள் அகற்றப்படுமா?
திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில் பஸ் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேஷ், குடிக்காடு.
கழிவறை வசதி அமைக்கப்படுமா?
பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, பூவனுார்.
