ADDED : ஜூன் 25, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
நிழற்குடை தேவை
திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிச்சைபிள்ளை, தளவாய். வெள்ளை வர்ணம் அடிக்கப்படுமா? பெண்ணாடம், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் விபத்துகளை தடுக்க வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும். - தனவேல், பெண்ணாடம். பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அவதியடைகின்றனர்.
- ராஜ்குமார், விருத்தாசலம்.
