ADDED : ஜன 30, 2026 06:48 AM
போக்குவரத்து நெரிசல்
வேப்பூர் கூட்டுரோட்டில் சர்வீஸ் சாலையில், வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சண்முகம், அரியநாச்சி.
நிழற்குடை அமைக்கப்படுமா?
விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், பயணிகள் திறந்த வெளியில், காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
வரதராஜன், விருத்தாசலம்.
ன் விளக்கு சீரமைக்கப்படுமா?
பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சியில் உயர்மின்கோபுர விளக்கு எரியாமல் உள்ளதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், திருவாமூர்.
பயணிகள் அவதி
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகள், கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், ஓட்டுனர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
பாலாஜி, விருத்தாசலம்.
சமூக விரோதிகள் அட்டகாசம்
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தின் பின்புறம் சமூக விரோதிகள் மதுஅருந்தும் கூடாரமாக மாறி வருகிறது.
சீனுவாசன், விருத்தாசலம்.

