/
புகார் பெட்டி
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் அ.தி.மு.க.,வினர் ரத்ததானம் புகார் பெட்டி
/
திருக்கோவிலுாரில் அ.தி.மு.க.,வினர் ரத்ததானம் புகார் பெட்டி
திருக்கோவிலுாரில் அ.தி.மு.க.,வினர் ரத்ததானம் புகார் பெட்டி
திருக்கோவிலுாரில் அ.தி.மு.க.,வினர் ரத்ததானம் புகார் பெட்டி
ADDED : பிப் 27, 2025 08:05 AM

திருக்கோவிலுார்,; திருக்கோவிலுார் நகர அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.
மாவட்ட தலைமை மருத்துவமனையுடன் இணைந்து, நடத்திய முகாமிற்கு நகர செயலாளர் சுப்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரகுரு முகாமை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க.,வினர், 77 பேர் ரத்ததானம் வழங்கினர். டாக்டர் ராஜவிநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த தானம் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், பழனிசாமி, சந்தோஷ், எம்.ஜி.ஆர்., மாநில இளைஞரணி துணை செயலாளர் விநாயகமூர்த்தி, வர்த்தக அணி செயலாளர் அஜித், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.