கரடு முரடான சாலையால் அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது.
மகேந்திரன், காரனுார்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதை கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சரவணன், கள்ளக்குறிச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுடன் ஏற்பட்டு அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.
வாகன ஒட்டிகள் அச்சம்
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் ஏரிக்கரை பகுதியில் புதியதாக போடப்பட்ட தார்சாலையின் ஓரப்பகுதியில் மண் கொட்டப்படாததால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.
கருப்பசாமி, பெருவங்கூர்.
மகளிர் சுகாதார வளாகம் தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த குருநாதபுரத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலு, குருநாதபுரம்.
ஏரியில் குப்பை
எலனாசூர்கோட்டை பைபாஸ் சாலையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
கவியரசன், எலனாசூர்கோட்டை.
கழிவறை வசதி தேவை
உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்களுக்கான கழிவறை வசதியின்மையால், அலுவலகத்திற்கு மக்கள் அவதிக்குள்ளாக்கின்றனர்.
வீரமணி, உளுந்துார்பேட்டை.
வாகன ஓட்டிகள் அச்சம்
தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் புறவழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ைஹமாஸ் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
ரவி, பிரதிவிமங்கலம்.
கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு
தியாகதுருகம் நகரில் சாலையையொட்டி கடைகாரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
சந்திரசேகர், தியாகதுருகம்.
மணி ஆற்றில் மணல் திருட்டு
புதுபாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி பகுதிகளில் மணி ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், பாச்சேரி.