மோசமான சாலையால் அவதி
உளுந்துார்பேட்டை அடுத்த பொரட்டங்குறிச்சி - கிளாப்பாளையம் சாலை பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழனிமலை, கிளாப்பாளையம்.
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளின் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
முருகன், உளுந்துார்பேட்டை
சாலையோர இறைச்சி கடையால் துர்நாற்றம்
உளுந்துார்பேட்டையில் சாலையோரம் செயல்படும் இறைச்சி கடைகள், சாலையோரத்திலேயே கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கணேசன், உளுந்துார்பேட்டை
'பார்' ஆக மாறிய திறந்தவெளி பகுதி
கள்ளக்குறிச்சி டாஸ்மாக் கடைகள் முன் திறந்த வெளியில் மது அருந்துவதால் பொதுமக்கள் மற்றும் பெண்களை முகம் சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மோஹிந்த், கள்ளக்குறிச்சி.
கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
சூளாங்குறிச்சியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சுரேஷ், சூளாங்குறிச்சி.
நாய்கள் தொல்லை
சங்கராபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் அதிக அளவில் நாய்கள் உள்ளன. இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று தெருவில் போவோர், வருவோரை துரத்திச் சென்று கடிக்கிறது. இதனால் ரோட்டில் நடமாட பொது மக்கள் ,சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமலிங்கம், வள்ளலார் நகர், சங்கராபுரம்.
குண்டும், குழியுமான சாலை
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை புதுபாலப்பட்டு - பழையபாலப்பட்டு தார் சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாய்கற்ற நிலையில் உள்ளது.
முகமத்கான், பழையபாலப்பட்டு.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி நகரின் நுழைவு பகுதியான கோமுகி ஆற்றுப் பாலம் சாலையோரத்தில், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து இரவு நேரங்களில் சிலர் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி.