ADDED : மார் 25, 2025 09:40 PM
ஆட்டோக்களில் அதிக கட்டணம்
கள்ளக்குறிச்சி துருகம் ரோடு சாமியார் மடம் அருகே ஆட்டோக்காரர்கள் நகருக்குள் வருவதற்கு ரூ.100க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பாதிப்படைகின்றனர்.
சத்தியமூர்த்தி, கள்ளக்குறிச்சி.
அதிவேக வாகனங்களால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி நகரில் போலீசார் கண்காணிப்பு இல்லாததால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் பெண்கள், பொதுமக்கள், முதியவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.
ஆதிமூலம், கள்ளக்குறிச்சி.
சேதமடைந்த பூங்கா
கள்ளக்குறிச்சி திருவரங்கம் நகரில் உள்ள பூங்கா புதர் மண்டி, நடை பாதைகள் சேதமடைந்து இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதியடைகின்றனர்.
ஆனந்தன், கள்ளக்குறிச்சி.
பள்ளி,அலுவலக நேரத்திற்கு பஸ்
உளுந்தூர்பேட்டையில் இருந்து செம்மணங்கூர் வழியாக அரளி செல்லும் அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் அலுவலக வேலைக்கு செல்வோர் நேரத்திற்கு இயக்கவேண்டும்
சுரேஷ், செம்மணங்கூர்-
சாலையில் நிறுத்தும் வாகனங்கள்
உளுந்தூர்பேட்டையில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் எளிதாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- குமார், உளுந்தூர்பேட்டை