ADDED : ஆக 12, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடிப்படை வசதி தேவை சின்னசேலம் அண்ணா நகர் பகுதி குடியிருப்பு பகுதியில் சாலை, குடிநீர், கழிவுநிர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இங்கு தினசரி குப்பைகளும் அகற்றப்படுவதில்லை.
முத்துராமலிங்கம், சின்னசேலம். கழிவுநீர் தேக்கம் வடபொன்பரப்பி வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
பாபு, வடபொன்பரப்பி. பயன்படாத கழிப்பறை பேரால் கிராமத்தில் காட்சி பொருளாக உள்ள பொது சுகாதார வளாக கட்டடத்தை பெண்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிந்தன், பேரால். டிராபிக் ஜாம் கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகள் அனைத்திலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
இளமதி தனபால், கள்ளக்குறிச்சி