sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மார் 21, 2025 06:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதுகாப்பு வேலி அமைக்கப்படுமா ?


தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சையது குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

-சித்ரா, தியாகதுருகம்.

தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்


கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ஷபியுல்லா, கள்ளக்குறிச்சி.

சிக்னல் தேவை


தியாகதுருகம் பஸ் நிலைய எதிரே திருக்கோவிலுார் சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்க வேண்டும்.

-முருகன், தியாகதுருகம்.

சாலையோரம் குப்பைகள்


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

நெடுஞ்சாலையில் விபத்து அதிகரிப்பு


மூங்கில்துறைப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகிறது.

-மணிகண்டன், மூங்கில்துறைப்பட்டு.

பயிர்கள் பாதிப்பு


கடுவனுாரில் நான்கு வழிச்சாலை பணியின் போது ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய் மூடப்பட்டதால் விவசாய பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-சிவராஜ், கடுவனுார்.

ஏரியில் குப்பை கொட்டும் அவலம்


எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-சிங்காரம், தியாகதுருகம்.






      Dinamalar
      Follow us