தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி....

புகார் பெட்டி....

புகார் பெட்டி....


ADDED : ஏப் 01, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்


உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடி அருகே நகருக்குள் செல்லும் சாலை மூடப்பட்டதால் விபத்து அபாயம் உள்ளது.

-தேன் தமிழ், உளுந்துார்பேட்டை.

கரடு முரடான சாலையால் அவதி


திருநாவலுார் அடுத்த நத்தாமூர்- அத்தியூர் செல்லும் சாலை கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ஆறுமுகம், நத்தாமூர்.

சாலையோரம் குப்பை எரிப்பு


கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

- பாபு, தச்சூர்.

பாலத்தில் குப்பைகள்


சின்னசேலம் அடுத்த கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உயர்மட்ட பாலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

-தேவநாதன், கனியாமூர்.

ஏரி ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி சித்தேரி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அய்யாசாமி, கள்ளக்குறிச்சி.

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா


கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பஸ் நிறுத்தத்தில் சேதமான பயணிகள் நிழற்குடை இருக்கைகளை சீரமைக்க வேண்டும்.

-முத்துகுமார், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us