நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
கச்சிராயபாளையம் - கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே விபத்து மற்றும் சாலை வளைவு பகுதியில் ஒளிரும் முன்னெச்சரிக்கை விளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன.
-ஞானசேகர், தோப்பூர்.
வழிகாட்டி தகவல் பலகை
கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், காரனுார் பஸ் நிறுத்தத்தில் அரசு கல்லுாரிக்கு செல்ல வழிகாட்டி தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமகிருஷ்ணன், காரனுார்.
குப்பைகள் எரிப்பு
சின்னசேலம் ஏரிக்கரையில், குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
-மணிமாறன், சின்னசேலம்.
துர்நாற்றம்
கோட்டைமேடு, பெரிய ஏரியில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசகிறது.
-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.
மழைநீர் தேக்கம்
வீரசோழபுரம் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
-வினோத்குமார், கள்ளக்குறிச்சி.

