நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
-கிருஷ்ண பிரதாப்சிங், மணம்பூண்டி.
நிழற்குடை தேவை
சின்னசேலம் அடுத்த பங்காரம் பஸ் நிறுத்தத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கம் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-ராஜேஸ்வரி, பங்காரம்.
சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
-கிருஷ்ணன், உலகங்காத்தான்.
குப்பைகளால் துர்நாற்றம்
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.
-அறிவுக்கரசு, கோட்டைமேடு.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-சரவணன், கள்ளக்குறிச்சி.