நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படித்துறை சீரமைக்கப்படுமா?
திருக்கோவிலுார் பஸ் நிலையம் எதிரில் தென்பெண்ணையாறு படித்துறைய சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், திருக்கோவிலுார்.
சேதமடைந்த வாய்க்கால்
திருக்கோவிலுாரில் சேதமடைந்து காணப்படும் ஆவியூரான் வாய்க்காலை, புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ராமன், திருக்கோவிலுார்.
சிக்னல் தேவை
சின்னசேலம் - மூங்கில்பாடி சாலையில் பொதுமக்கள் சாலையை கடக்கும் முக்கிய இடங்களில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கட், சின்னசேலம்.
உலர்களமான நெடுஞ்சாலை
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு, விவசாய விளைபொருட்களை கொட்டி உலர் களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-அறிவழகன், மாடூர்.
சுகாதார சீர்கேட்டால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி, பஸ் நிலைய கட்டண கழிப்பறை முறையான பராமரிப்பில்லாததால், பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.
-சரவணன், கள்ளக்குறிச்சி.

