நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிஜிட்டல் பேனர்களால் அச்சம்
எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்த சாலையின் இருபுறமும் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
-ஹரிகரன், எலவனாசூர்கோட்டை.
நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-அறிவழகன், ரோடுமாமந்துார்.
தெருநாய்களால் தொல்லை
கள்ளக்குறிச்சி துருகம் ரோடு அண்ணாமலை அபார்ட்மென்ட் பகுதியில் தெருநாய்களால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
-நடராஜன், கள்ளக்குறிச்சி.
சுற்றுச்சூழல் மாசுபாடு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.
-விக்னேஷ், கள்ளக்குறிச்சி.