ADDED : மே 01, 2025 05:43 AM
பஸ் நிறுத்தம் மாற்றப்படுமா?
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பஸ் நிறுத்தம் சாலையை ஒட்டியவாறு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும்.
-ரேவதி நாராயணன், கள்ளக்குறிச்சி.
கழிப்பறைகள் தேவை
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற போதிய அளவில் கழிவறைகள் அமைக்கப்படாததால், வெளியூரில் இருந்து வருவோர் அவதிக்குள்ளாகின்றனர்.
-குருராஜ் தெய்வீகன், கள்ளக்குறிச்சி.
பாதுகாப்பற்ற இறைச்சி விற்பனை
கள்ளக்குறிச்சியில் இறைச்சி கூடம் இல்லாததால், சாலையோரங்களையே ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி வெட்டும் இடமாக மாற்றி வருகின்றனர்.
-அசோக்குமார், கள்ளக்குறிச்சி.
அடிப்படை வசதி இல்லாமல் அவதி
கள்ளக்குறிச்சி நகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் மின்விளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர்தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
-சாய் கணேஷ், கள்ளக்குறிச்சி.
விபத்து அபாயம்
கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் சாலையோரங்களில் பெரும்பாலான மின் கம்பங்கள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருப்பதால், வாகனங்களில் செல்வோர் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
-இளமுருகு அன்பரசன், ரோடு மாமந்துார்.