
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட நுாலகம் அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக மாவட்ட நுாலகம் கட்டப்படாமல் இருப்பதால், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-மணிகண்டன், கள்ளக்குறிச்சி.
மேம்படாத அடிப்படை வசதிகள்
கள்ளக்குறிச்சி பெருநகரத்தில் வணிக நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வரும் அளவிற்கு அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா?
-கண்மணிராஜா, கள்ளக்குறிச்சி.
துர்நாற்றத்தால் தவிப்பு
கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்குள் நுழையுமிடத்தில் கோமுகி ஆற்றங்கரையை கடக்கும்போது பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.
-ஹேமா, கள்ளக்குறிச்சி.
கொசுத்தொல்லையால் அவதி
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தாவிடில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி பாதிப்பு ஏற்படும்.
-லதா பாபு, கள்ளக்குறிச்சி.