ADDED : ஜூலை 22, 2025 06:35 AM
குரங்குகளால் தொல்லை திருக்கோவிலுார் அரசு ஊழியர் நகர் மற்றும் மாருதி நகரில், தெரு நாய்கள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
--ஜானகிராமன், திருக்கோவிலுார். -கழிவுநீர் வாய்க்காலில் குடிநீர் பைப் அகரகோட்டாலம் பகுதியில் தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாயில், குடிநீர் பைப் லைன் இணைந்திருப்பதால், சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
-கோவிந்தராஜ், அகரக்கோட்டாலம். திறக்காத கழிப்பறை அணைகரைகோட்டாலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்படாமல் பல மாதங்களாக பூட்டி கிடப்பதால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
-வெங்கடேசன், அணைகரைகோட்டாலம். துார்ந்துபோன வடிகால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே வடிகால் வாய்க்கால் துார்ந்துபோய் கிடப்பதால், மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது.
-மணி, கள்ளக்குறிச்சி.