நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாறுமாறாக நிற்கும் பைக்குகள் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-பிரேம், கள்ளக்குறிச்சி. போலீஸ் நிலையம் தேவை களமருதுாரில் இருந்து திருநாவலுார் போலீஸ் நிலையத்திற்கு 25 கி.மீ., துாரம் சென்று செல்ல வேண்டி உள்ளதால், களமருதுாரிலே புதிதாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
-சிவசங்கர், களமருதுார். ஆக்கிரமிப்பில் மந்தைவெளி கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் தள்ளுவண்டி கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்களை இயக்க இடமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
-சக்திவேல், கள்ளக்குறிச்சி. சேதமான வார சந்தை ரிஷிவந்தியத்தில் உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ள வார சந்தை கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், ரிஷிவந்தியம்.