கள்ள லாட்டரி விற்பனை திருக்கோவிலுார் லாலா தோப்பு பகுதியில் கள்ள லாட்டரி, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை சகஜமாகி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது.
-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி. -குறுகலான சாலைகள் கள்ளக்குறிச்சியில் சேலம், சென்னை பிரதான சாலைகள் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இரு சாலைகளும் அகலம் சுருங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
-உஷாகுமாரி, கள்ளக்குறிச்சி. --பஸ் நிலைய ஆக்கிரமிப்பு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தின் நடைபாதை முழுவதும் சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிக்கபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
-பிரேம், கள்ளக்குறிச்சி. -தள்ளு வண்டிகளால் ஆக்கிரமிப்பு சின்னசேலம் பஸ் நிலைய பகுதிகளில் தள்ளு வண்டிக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்களை இயக்க முடியாமலும், பயணிகள் நிற்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
-மகாலஷ்சுமி, சின்னசேலம்.