பராமரிப்பின்றி பஸ் நிலைய கழிவறை திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் முறையாக பராமரிக்காததால் பொதுமக்கள், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
-கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி. சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கள்ளக்குறிச்சி அண்ணா நகரிலிருந்து தென்கீரனுார் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
- சங்கரன், கள்ளக்குறிச்சி. பேரிகார்டு அமைக்கப்படுமா? தியாகதுருகத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பாவந்துார் அருகே விபத்து ஏற்படும் வகையில் உள்ள சாலை வளைவு பகுதிகளில் பேரிகார்டு அமைக்க வேண்டும்.
-ராஜன், பாவந்துார். அம்மா உணவகத்திற்கு வழியில்லை கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்திற்கு செல்ல வழியில்லாத அளவிற்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உணவு சாப்பிட வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
-ரவி, கள்ளக்குறிச்சி.