ADDED : செப் 20, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்குடை அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி கடைவீதிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதியடைகின்றனர்.
-பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி. பஸ் நிறுத்தத்தில் குப்பைகள் மடப்பட்டு பஸ் நிறுத்தம் பக்கத்தில் கொட்டப்படும் குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-செல்வம், மடப்பட்டு. சாலை ஆக்கிரமிப்பு தியாகதுருகத்தில் போக்குவரத்து மிகுதியான சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
-குமார், தியாகதுருகம்.