
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகார் பெட்டி தேவை
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
-பிரேம்குமார், கள்ளக்குறிச்சி.
சாலையோர வாகனங்களால் பாதிப்பு
சின்னசேலம் நகரப்பகுதி சேலம் நெடுஞ்சாலையோரத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் போக்குவரத்து பாதிப்படைகிறது.
-செல்வம், சின்னசேலம்.
சிமென்ட் சாலை பழுது
சின்னசேலம் கடை வீதியில் மீனவர் சாலை வரை 8 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
-ராமநாதன், சின்னசேலம்.
தெரு நாய் தொல்லை
சங்கராபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
-பாலு, சங்கராபுரம்.