நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார் இரட்டை விநாயகர் கோவிலை சுற்றி தள்ளுவண்டி, நடைபாதை மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-கிருஷ்ண பிரதாப் சிங், திருக்கோவிலுார்.
வாய்க்கால் அடைப்பு
மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகர் கழிவுநீர் கால்வாயில் சிலர் கற்கலை கொட்டி வைத்திருப்பதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
-இளங்கோவன், மூங்கில்துறைப்பட்டு.
கழிவுநீர் தேக்கம்
வடபொன்பரப்பி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-எத்திராஜ், வடபொன்பரப்பி.