sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : பிப் 18, 2025 03:53 AM

Google News

ADDED : பிப் 18, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடையூறு முட்செடிகள்

அகற்றப்படுமா?

வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கத்தில் இருந்து மருதம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது.

இந்த பாலத்தை ஒட்டி வளர்ந்துள்ள சீமை கருவேல மரத்தின், கூர்மையான முட்கள் உள்ள கிளைகள், சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.

இதனால், இப்பாலத்தின் வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிடசாலையோரம் ஒதுங்கும்போது, சீமை கருவேலமரத்தின் கூர்மையான முட்கள், வாகன ஓட்டிகளின் கண், கை, கால், முகம் உள்ளிட்ட பாகங்களை பதம் பார்த்து விடுகின்றன.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.தனசேகரன்,

வாலாஜாபாத்.

திருமுக்கூடல் கோவிலில்

கழிப்பறை வசதி இல்லை

உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில்அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள, இக் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் திரளாக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு வெளியே பக்தர்கள் பயன்படுத்தும் விதமாக, கழிப்பறை வசதி ஏதும் இல்லாமல் உள்ளது. அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். -

- எம். அறிவழகன்,திருப்புலிவனம்.

பைபர் வேக தடை

அகற்ற கோரிக்கை

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே ரயில் வழித்தடம் செல்கிறது. கோவிந்தவாடி, ஊவேரி, கூரம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட ரயில் கடவுப்பாதைகளை ஒட்டி பைபர் வேக தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை காட்டிலும், ரயில் கடவுப்பாதை உயரமாக உள்ளது. ரயில் கேட் போடும் போது, கடவுப்பாதை ஓரங்களில் நிற்கும் வாகனங்கள் ரயில் கடவுப்பாதைகளை கடக்க முடியாமல் வாகனங்கள் திணறுகிறது.

இதை தவிர்க்க, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஓரம் போடப்பட்ட பைபர் வேக தடைகள் அகற்ற வேண்டும்.

- கே. பன்னீர்செல்வம்,கம்மவார்பாளையம்.

தோண்டாங்குளம் சாலை

சீரமைக்கப்படுமா?

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொள்ளாழி, தோண்டாங்குளம், உள்ளாவூர் உள்ளிட்ட கிராமவாசிகள், தோண்டாங்குளம் சாலை வழியை பயன்படுத்தி, தேவேரியம்பாக்கம் மற்றும் வாரணவாசி உள்ளிட்டபகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், விவசாயம் பணி சார்ந்த வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

இந்த சாலையில், லிங்காபுரம் அடுத்த தோண்டாங்குளம் வரையிலான ஒரு கி,மீ., துாரத்திற்கான சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, லிங்காபுரத்தில் இருந்து, தோண்டாங்குளம் செல்லும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - பி. சரவணன்,தோண்டாங்குளம்.






      Dinamalar
      Follow us