/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் மின் கம்பம்
/
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் மின் கம்பம்
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் மின் கம்பம்
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் மின் கம்பம்
ADDED : ஆக 11, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாகாணியம் ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பெரும்பேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு அழகூர் சாலையையொட்டி, மின் கம்பங்கள் வழியாக மின்கம்பி செல்கிறது.
இதில், சில மின் கம்பங்கள் சேதடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது. எலும்பு கூடாக உள்ள மின் கம்பம், எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
எனவே, சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.பாலாஜி,
மாகாணியம்.