/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : பொது கழிப்பறைக்கு கதவு அமைக்கப்படுமா?
/
புகார் பெட்டி : பொது கழிப்பறைக்கு கதவு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி : பொது கழிப்பறைக்கு கதவு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி : பொது கழிப்பறைக்கு கதவு அமைக்கப்படுமா?
ADDED : மே 20, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் யாகசாலை மண்டபம் பின் தெருவில், அப்பகுதியினரின் வசதிக்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆறு கழிப்பறைகளுடன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பொது கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு கழிப்பறையின் இரும்பு கதவு துருப்பிடித்து கழன்று வந்துவிட்டது.
இதனால், கதவு இல்லாத கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, துருப்பிடித்து கழன்ற கழிப்பறைக்கு புதிதாக கதவு அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரவி,
காஞ்சிபுரம்.