/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?
/
புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?
புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?
புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?
ADDED : ஜூலை 08, 2025 12:12 AM

திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது. இங்கிருந்து, மதுார் மற்றும் அருங்குன்றம் வரையிலான சாலை, கனரக வாகனங்களால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
பழுதான இச்சாலையில் எப்போதும் மண் புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால், அச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கண்களில் மண் பரவியும், மூச்சு திணறலாலும் சிரமபடுகின்றனர்.
மண் பரவுதலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டுகளில் சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவ்வாறு செய்வதில்லை.
எனவே, மதுார் கூட்டுச்சாலை மற்றும் அருங்குன்றம் இணைப்பு சாலையில், நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி. தயானந்தம்,
அருங்குன்றம்.