
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையோர குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு வா லாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் கருக்குப்பேட்டையில் இருந்து ஏகனாம்பேட்டைக்கு செல்லும் சாலை உள்ளது. ஏகனாம்பேட்டை, வில்லிவலம், பெண்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலைக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஏகனாம்பேட்டையில் இயங்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இச்சாலை வழியாக மாணவியர் சென்று வருகின்றனர். இச்சாலை ஓரங்களிலும், பள்ளி அருகாமையிலான பொது இடங்களிலும் குப்பை கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் துர்நாற்றம் ஏற்பட்டு, இச்சாலை வழியாக செல்வோர் அவதிப்படுகின்றனர்.
எனவே, சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையிலான இச்சாலையோர குப்பை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம். சரண்ராஜ், ஏகனாம்பேட்டை.

