
குப்பை கழிவுகளால் துார்ந்த
வல்லப்பாக்கம் நீர்வரத்து கால்வாய்
வா லாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு தெருக்கள் வழியாக, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் இக்கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், வல்லப்பாக்கம் ஏரி நிரம்ப வழி வகுக்கிறது.
இந்நிலையில், பாலாற்றில் இருந்து வல்லப்பாக்கம் செல்லும் வரத்து கால்வாயின் பல்வேறு இடங்களில் கால்வாயையொட்டி உள்ள குடியிருப்பு மக்கள் குப்பை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.
இதனால், இந்த நீர்வரத்து கால்வாய் குப்பையால் துார்ந்து தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுகளாக தேக்கம் அடைந்துள்ளது.
மேலும், கால்வாய் அடைப்பால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் குப்பையை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர். சுப்பிரமணி, வாலாஜாபாத்.