
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடிகால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் உ த்திரமேரூர் பேரூராட்சி, 16-வது வார்டு, வாடா நல்லுார் பஜனை கோவில் தெருவில், ஆறு மாதத்திற்கு முன் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது, வடிகால்வாய் பணிக்காக பஜனை கோவில் சாலை வளைவில், தோண்டிய பள்ளம் இன்னமும் சீரமைக்கப் படாமல் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வாடாநல்லுாரில் வடிகால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டிய பள்ளத்தை, பேரூராட்சி நிர்வாகம் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெ. ஜான்சன் ஜெபராஜ், உத்திரமேரூர்.

